Shrine-Vilakshanananda Parmathmaji
it is surprising and astonishing to draw a paralell like lord sri Ranganatha selecting srirangam as his abode and here also swami vilakshnanda paramathamaaji deciding to settle his samadhi in a small remote village Melmayil situated in the Vellore District of Tamilnadu and now becoming well known and popular.
மகுடம் சூடிய மேல்மாயில்:
திருச்சி மாநகரில் காவேரி நதி தீரமுள்ள சிற்றூரில் திருமால் அரங்கன் பள்ளிகொண்டதால் "ஸ்ரீரங்கம்" என பெயர் பெற்று பூலோக வைகுண்டமாகி லோகத்திற்கு அருள் பாவிப்பதைப் போன்று வேலூர் மாவட்டத்தில் காட்பாடி அருகிலுள்ள சிற்றூரில் மேல்மாயில் ஸ்ரீ விலக்ஷணானந்த பரமாத்மாஜியின் சமாதி அமையப் பெற்றது முதல் பக்தபுரியாக உலகத்தார் நாடும், போற்றும் உன்னத ஊரானது.
SAMADHI LOCATION : Samadhi at Melmayil located 22km from Katpadi Railway Station (near virinchipuram railway station) local town buses are available to reach samadhi .
மேல்மாயில் அமைவிடம்: இத்திருத்தலம் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து சுமார் 22 கி.மீ தொலைவில் (விரிஞ்சிபுரம் இரயில்நிலையம் அருகில்) உள்ளது. மேல்மாயில் சமாதி சென்று வர நகரப் பேருந்து வசதிகளும் உள்ளது.
Prior to the year 1939 it was " Arcot sri Narasimma Iyengar " working as post master initiated swamiji's book “Gyanarahasyam” to the devotees
of Melmayil. Having read the book, many of them were eagar to meet swamiji and incidentally met him at “Kumaradhara” and requested him to visit Melmayil.
Accordingly it was in 1939 for the first time swamiji visited and also dedicated a “Pathigam” to lord Ganesa. it is worth
mentioning here that he would be having a long association with Melmayil and subsequently it reflected in selecting swamiji's samadhi there with in the span of six years (1939 To 1945) he visited Melmayil innumerable times. On all these occasions it was thrilling and amazing to watch the
devotees participating in the processions with ‘OMKARA’ caps, saffron flags , and tradtional music. 21 ardent devotees of swamiji from Melmayil having visited Kumaradhara find their names engraved on
the cave where swamiji was doing his penance. It is worth while to mention here "Sriman Bashyam" played major role in Melmayil activities.
"மேல்மாயிலில் ஸ்வாமிகள் விஜயம்" :
தபால் அலுவலகத்தில் தலைமை அதிகாரியாக பணியாற்றி
வந்த ஆற்காடு ஸ்ரீ நரசிம்மா ஐயங்கார் அவர்கள் ஸ்வாமிகள்
அருளிய "ஞானரகஸ்யம்" என்னும் நூலை மேல்மாயில்
அன்பர்களிடம் கொடுத்தார் அந்நூல் படித்த அன்பர்கள்
ஸ்வாமிகளை தரிசிக்க ஆவல் கொண்டனர் . அவர்கள்
பரமாத்மாஜியை திருமலை குமாரதாராவில் அவர்
தவமேற்றும் காலத்தில் கண்டு தங்கள் கிராமத்திற்கு
வரும்படி சவாமிகளிடம் வேண்டினர். அதற்கேற்ப
1939 ஆம் ஆண்டு ஸ்வாமிகள் மேல்மாயிலுக்கு
முதல் முறையாக விஜயம் செய்தனர்.
அங்கிருந்த கற்பக விநாயகர் மீது அவரருளிய
பதிகத்தில் "நினை அறியும் மேல்மாயில் நீள் காலம் முயல்வேனே" என்று பாடியுள்ளார்.
அவ்விதமே 17 நவம்பர் 1945 முதல்
ஸ்வாமிகள் மேல்மாயில் சமாதியில் உறைவது
அற்புதங்களில் அற்புதமானது. ஆறு ஆண்டுகளுக்குள்
எண்ணற்றமுறை மேல்மாயிலுக்கு
விஜயம் செய்த ஸ்வாமிகளை் இவ்வூர்
அன்பர்கள் அனைத்து விஜயங்களின் போதும்
ஓம்காரக்குல்லா , காவி கொடிகள் சரிதம்
உரிய மேளதாளங்களுடன்் வரவேற்று
வழியனுப்பியுள்ளனர். மேல்மாயில் பக்தர்களில் 21 ப்ரிய சிஷ்யர்கள், சுவாமிகளுடன் குமாரதார விஜயம் செய்ததை அங்குள்ள குகை கல்வெட்டுகளில் மேற்கூறிய 21 சிஷ்யர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது. அவர்களுள் மிக
முக்கியமானவர் அமரர் திரு. பாஷ்யம் ஆவார்.
This was seconded by others including Sivavamiyaa. Swamijis mortal remains shifted by 9:00 PM by a van. This very well coincided with Swamijis wish, as mentioned In the “Karpaga Vinayagar Pathigam”.
To EMAPHASIZ THE SAME When the " Dr. Smt AnanthaKrishna’s" team went for an exploration tour to gather information about Swami Vilakshanada’s VIJAYA YATRA.
In and around our country while visiting "Panrutti" in Sep 2021 the wish of paramathmaji to have his Swamiji at Melmayil was confirmed by the relative (son – in – laws) of the oldest devotee Sriman. Ramaswamy Chettiar (former Burma – shell Agent)
obtained the information directly from paramathmaji. It is nice to mention here that the same Ramasamy Chettiar built a Swami VILAKSHANANANDA MUTT at their village "Vizhamangalam" , Panrutti
by enshrining Panchaloga idol.
Locals Visit This MUTT and POOJAS conducted regulary by serving prasadam.
The samadhi shrine constructed and enshrines with all dictum & religious chanting under the able guidance of Acharya Swamigal.
(an ardent disciple of the enlighted soul and adwaidik well known for his bajan sriman ACHUTHA DAS SWAMIJI).
earlier during life time of paramatmaji, he instructed his disciple panrutti sriman. rama
swamy chettiyar to enshrine an enthara with all the precious stones at the samadhi site. he also cordoned the area with a wall.
Until now the Melmayil shrine is worshipped like any other temple by offering daily, monthly, yearly pooja, guru pooja, guru jayanthi, guru poornima by the devotees. Swamiji’s Devotees offer space , finance , materials, human help to support the programmes. We can proudly say kumbhabishegam conducted in nov 2018 elaborately in all pomp.
ஸ்வாமிகள் விதேகமுக்தி : 1945 ஆம் ஆண்டு ஸ்ரீ விலக்ஷணானந்த ஸ்வாமிகள் கார்த்திகை மாத உத்திரட்டாதியில் (16 - 11 -1945 ) திருவள்ளூரில் இறையுடன் இரண்டறக் கலந்தார். அன்றைய தினம் சென்னை, செம்பியம் சுந்தரி அம்மாள் இல்லத்தில் பரமாத்மாஜியின்் இறுதி பூஜைகள், சடங்குகள் வெகு விமரிசையாக ஸ்ரீமான் சிவராமையா தலைமையில் நடந்தது. அதே சமயம் ஸ்வாமிகளின் சமாதி எங்கு நிறுவலாம் என்று பக்தர்கள், சிஷ்யர்கள் கலந்து ஆலோசித்த வேலையில் பக்தியுடனும், கண்ணீருடனும் எங்களூரில் என்று கூறியவர்கள் மேல்மாயில் அடியார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதை ஆமோதித்த ஸ்ரீமான் சிவராமைய அவர்கள் மாற்று கருத்தின்றி மேல்மாயிலில் ஸ்வாமிகள் சம்மதி அமைய ஒப்புதல் பெற்று தந்தார். பரமாத்மாஜியின் விருப்பமும் அதுவே. என்பதை ஸ்வாமிகள் அருளிய மேல்மாயில் கற்பக விநாயகர் பதிகத்தின் மூலம் அறிகிறோம்.{ அதை மேலும் ஊர்ஜிதப்படுத்தும் விதமாக டாக்டர் திருமதி. அனந்தகிருஷ்ணா 2021 மார்ச் முதல் பரமாத்மாஜியின் ஜீவிய சரித்திர நூலுக்கான ஆய்வு களப்பணியில் ஸ்வாமிகள் சென்ற சில ஊர்களுக்கு சுமார் 6000 கீ.மீ பயணித்து நூலுக்கான குறிப்புகளை தற்போதைய நிலையை கண்டு வருகையில் 14 .9 .2021 அன்று பண்ருட்டியில் ஸ்வாமிகளின் பிரிய சீடர்களில் ஒருவரான அன்றைய பர்மா ஷெல் ஏஜென்ட், தனவந்தர், தர்மிஷ்டர் ஸ்ரீமான் இராமசாமி செட்டியாரின் வாரிசுகளை க்ஷண நேரத்தில் கண்டது ஸ்வாமிகள் நிகழ்த்தும் பல அதிசயங்களில் ஒன்று. ஆம்! விழமங்கலத்தில் விலக்ஷணானந்த மடம் ஒன்றை ஸ்வாமிகளின் விதேக முக்திக்கு பிறகு நிறுவிய இராமசாமி செட்டியார் பஞ்சலோகத்தாலான விலக்ஷணானந்தர் சிலை அமைத்து இன்று வரை அவரது வாரிசுகள் பூஜித்து வருகின்றனர். பரமாத்மாஜி விதேகமுக்தி அடைந்த செய்தியை தந்தி மூலம் அறிந்த இராமசாமி செட்டியார் தமது குடும்பத்தாரிடம், பரமாத்மாஜி தன்னிடம் ஒரு சமயம் தனது சமாதி மேல்மாயிலில் அமையவேண்டும் என்று கூறியதை எங்களிடம் எடுத்துரைத்தார், பண்ருட்டி இராமசாமி செட்டியாரின் மருமகனான இராமச்சந்திர செட்டியார்]. இன்று வரை ஸ்வாமிகளின் சமாதி சிறந்த கற்கோவிலாகத் திகழவும் , மற்றும் நித்ய மாதாந்திர, வருடாந்திர பூஜைகள், குரு பூஜை, குரு ஜெயந்தி போன்ற விழாக்கள் வெகு விமரிசையாக நடைபெற பரமாத்மாஜியின் பக்தர்கள், சிஷ்யர்கள், அடியார்களின் பங்கு (நிலம், பொருள், நிதி, சரீர உபகாரங்கள் ) அளப்பரியது. சமீபத்தில் 2018 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் அடியார்களின் பேருதவியால் வெகு சிறப்பாக நடந்தது.
MORNING
8.30AM – 10AM : - ABISHEGAM WITH MILK, MAHA
NEIVEDYAM, DEEPA ARRADHANA
OFFERED TO GANAPATHY, VENKATESHWAR,
AND GURU.
EVENING
5:30PM- 7PM:- DEVOTIONAL SONGS AND DEEPA ARAADHANA.
“AGANDA DEEPAM “ OF TWO KUTTHU VILLAKKU (BRASS LAMP)
EMANATING LIGHT THROUGH OUT THE YEAR AND
IT IS BEING TAKEN CARE BY FOLLOWERS .DEVOTEES
COMING FROM OUT- STATIONS GET PRIVILEGE
OF DHARSAN AND SPECIAL POOJA BY
INTIMATING THE ADMINISTRATION IN ADVANCE.
.
EKADESI, POOJA TWICE A MONTH, POURNAMI POOJA , SWAMI JI MONTHLY STAR SADHAYAM (SADHABISAK) POOJA, SIMILARLY LORD VENKATESHSWARA MONTHLY STAR SRAVANA THIRUONAM POOJA.
TAMIL NEW YEARS DAY IN APRIL, GURU POORNIMA,
KRISHNASTAMI, VINAYAGAR CHATHURTHI, ALL SATURDAYS
OF PURATTASI, NAVARATHRI, VIJAYA DASAMI,
DEEPAVALI, KARTHIGAI DEEPAM, GURU POOJA (KARTHIGAI UTHIRATTADHI), GURU JAYANTHI (MARGAZHI SADHAYAM)
AND ENGLISH NEW YEAR ARE THE DAYS
CELEBRATED WITH SPECIAL ABISHEGAM &
ARADHANA.
SPECIALLY ON THE DAYS OF GURU POOJA.
AND GURU JAYANTHI SPECIAL ANNADHANAM
SERVED TO ALL THE DEVOTEES WITH REVERENCE.
NOTE:-
AT THE REQUEST OF THE DEVOTEES
“SPECIAL POOJAS” ARE CONDUCTED ON
INDIVIDUALS BIRTHDAY, MARRIAGE
ANNIVERSARY AND ANY OTHER
OCCASIONS.
மேல்மாயில் ஸ்ரீ விலக்ஷணானந்த ஸ்வாமிகள் சமாதி பூஜை விபரங்கள்
தினசரி:- காலை - பாலபிஷேகம், மஹா நைவேத்தியம், தீபாராதனை 8:30 TO 10 a.m.
மாலை - ஸ்தோத்திரம் தீபாராதனை 5:30 to 7pm
24 மணி நேரமும் அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது. வெளியூர் பக்தர்கள் முன் கூட்டியே தாங்கள் வரும் நேரத்தை தெரிவித்தால் அதற்கேற்றவாறு அவர்கள் தரிசனத்திற்காக பிரத்யேக ஏற்பாடு செய்து தரப்படும்.
பிரதிமாதம்:- வளர்பிறை ஏகாதசி, தேய்பிறை ஏகாதசி பொவுர்ணமி மற்றும் குருநாதரின் நக்ஷத்திரமான சதயம், ஸ்ரீ வெங்கடேசப்பெருமாளின் நக்ஷத்திரமான திருவோணம் ஆகிய நாட்களில் விசேஷ அபிஷேக, அலங்கார, பூஜை வைபவங்களும் நடைபெறும்.
வருடாந்திர நிகழ்வுகள்:- தமிழ் வருட பிறப்பு , குரு பூர்ணிமா( ஆனி பௌர்ணமி )
ஸ்ரீ கிருஷ்ணா ஜெயந்தி , விநாயக சதுர்த்தி , புரட்டாசி சனிக்கிழமை , நவராத்திரி, விஜயதசமி, தீபாவளி, கார்த்திகை தீபம் , கார்த்திகை உதிரட்டத்தியன்று குருநாதரின் குரு பூஜை, மார்கழி சதயத்தில் குருநாதரின் ஜெயந்தி , ஆங்கில வருட பிறப்பு ஆகிய நாட்களில் விசேஷ பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறும். குருபூஜை, குருஜெயந்தி நாட்களில் விசேஷ அன்னதானம் அனைவருக்கும் அளிக்கப்படும்.
குறிப்பு: பக்தர்களின் வேண்டுகோளின்படி அவரவர்களின் பிறந்தநாள், திருமணநாட்களில் அவர்களுடைய விருப்பப்படி விசேஷ பூஜை, அபிஷேகங்கள் அன்னதானங்களும் நடைபெறும்.
குரு சமாதியில் வருடம் முழுவதும் ஏற்றப்படும் அகண்ட தீபத்திற்கு தேவையான நல்லெண்ணெய், திரி ஆகிய பொருட்களாகவும், பணமாகவும் பக்தர்கள் தந்தருளுகின்றனர்.