Popular Quotes of Swamiji

Sri Vilakshanananda Paramathaji

பிரம்ம சாக்ஷாத்காரம் :

பரிசுத்தம் எங்கே உதயமோ அங்கே பக்தி உதயம்
பக்தி எங்கே உதயமோ அங்கே அன்பு உதயம்
அன்பு எங்கே உதயமோ அங்கே சாந்தம் உதயம்
சாந்தம் எங்கே உதயமோ அங்கே சக்தி உதயம்
சக்தி எங்கே உதயமோ அங்கே கிருபை உதயம்
ஞானம் எங்கே உதயமோ அங்கே கடவுள் உதயம்
கிருபை எங்கே உதயமோ கடவுள் உதயம் பெற்றவர்
ஜனன மரண நிவர்த்தி கடவுளே ஆகிரூர்.
" PEACE ENHANCES STRENGTH UNDAUNTED KINDNESS LEADS TO GODLINESS"

இவ்வுலகில் உயிரோடிருக்கும் போதே ஆத்மானுபவம்,
ஞானமோ க்ஷம் கிடைக்க வேண்டும். இதுதான்
ஜீவன் முக்தி. ஸ்ரீ பகவத் கீதையின் அர்த்தமும் இதுவே.
" LIBERATION (JEEVAN MUKTHI) IS TO BE ATTAINED DURING ONE’S LIFE. THIS CORRELATES VERY WELL WITH TEACHINGS IN ‘BHAGAVADGITTA"

சத்ய ஞான ஆசாரங்கள் TRUE HONEST LIVING
கொல்லாமை NON KILLING
பொய் பேசாமை TRUTHFULNESS
களவின்மை NON STEALING
புலால் உண்ணமை VEGETARIANISM
குறைத்துச் சாப்பிடுதல் MINIMAL EATING
பிறர் குற்றங் கூறாமை NON CRITICAL

விடாமுயற்சி , பொறுமை , சாந்தம், வைராக்யம்,
சத்தியம் இவ்வைந்தும் கடவுள் அடைவதற்கு நேரான
பரம சாதனங்கள்.

TIRELESS STRIVING, FORBEARANCE, CALMNESS, DETERMINATION, HONESTY ARE KEY TO REALISATION

ஸ்ரீ பகவத் கீதையும் , தாரக நாமமும் (ராமநாமஜபம் )
எல்லோரும் அனுஷ்டிக்க வேண்டியது. கடவுளை அடைவதற்கு
தடையாயுள்ள மூலப்ரக்ருதி "இருட்டை' பிளக்கக் கூடிய பெரிய ஆயுதம்.

BHAGAVAD GITHA, RAMA NAMA ARE THE TOOLS TO REMOVE DARKNESS (IGNORANCE)

தனக்காக செய்யும் காரியங்கள் விலக்குவது தான் சந்நியாஸம் ஒரு குடும்பத்தை விட்டு வருகிற சந்நியாசிக்கு உலகமே குடும்பமாகிவிடும்
THE WORLD ITSELF HIS/HER FAMILY FOR A RENOUNCED SOUL.

பூரண சுதந்திரம் என்பது நாட்டின் விடுதலையும், மத சுதந்திரம், மெய்யான அறிவு என்று இம்மூன்றும் ஒருங்கே பெறுவது ஆகும்.

COMPLETE INDEPENDENCE DOES NOT MEAN COUNTRY ALONE BUT TO INCLUDE RELIGION AND WISDOM

ஒவ்வொருவரும் அவரவர்களது செய்கைகளாலேயே
(கர்மவினைகளினால்) இறப்பது, பிறப்பது, சுகதுக்கமடைவது, மாற்றமடைவது இவைகள் அடைகிறார்களேயன்றி, கடவுளால் உண்டாகிறதில்லை.

EVERY SOUL, BY ITS OWN DEEDS GO THROUGH THE PROCESSES OF BIRTH , DEATH , SUFFERINGS AND PLEASURES, AND NEVER DUE TO GOD (OR) ANY OTHER FORCE

"சீதையினை மாயையெனச் செப்புநெறி "
லக்ஷ்மணனை விவேக மென்றே வாதைபடு மிராவணனை அகங்காரத்தே வந்தவழி கூட்டத்தார் மிராமமுனி தாதவிழு தயரதன்றான் ஜீவனென்றே தயரதன்றான் பிரஹ்மனென வகுத்த நாளில் ஏதுமறி யாதவணா னென்னே செய்கேன் இறைஞ்சுகேன் அப்பாலு மிறைஞ்சுகேனே

மனதை ஏகாக்கிரகப்படுத்திக் ( ஓருநிலைப்படுத்தி) கொண்டு எதை நினைத்தாலும் அது உடனே சித்தரிக்கிறது.
FOCUSSED THINKING REFLECTS IN RETURN

தன் குற்றத்தைக் கவனிப்பவன் பிறர் குற்றத்தைக் கவனிக்கமாட்டான்.

SELF INTROSPECTING PERSON WILL NEVER ANALYSE OTHERS

சோகப்படுவதால் உருவம் கெடும். ஆயுளும் , தர்மமும் குறையும்.

ENDLESS BROODING WILL RESULT LOSS OF PHYSICAL, MENTAL & MORAL Health

எப்போதும் க்ஷேமத்தையே (நல்லதையே) சிந்தித்து வருவதால் க்ஷேமமே உண்டாகிறது.

“POSITIVE THINKING REFLECTS ITSELF “

பொறாமை, அசூயை உடையவர்களிடமிருந்து லக்ஷ்மி
விலகுகிறாள்.

GODDESS OF WEALTH ABSTAINS FROM JEALOUS PEOPLE

தப்பான எண்ணங்களும் செயல்களும் உள்ளவர்களுக்கே பயம் பிரதிபலிக்கும்.

“ GUILTY CONSCIENCE PRICKS THE MIND”

ஞானத்தின் கடைசி எல்லையே மஹா மௌனம்

FINAL DESTINATION OF ENLIGHTMENT ENDS IS SILENCE”

எந்த ஜீவனுக்கும் அநீதியும் அக்கிரமும் செய்யாதே

DON’T BE UNREASONABLE AND UNJUSTIFIED TO ANY LIVING BEING

சரீரத்தைத் தான் என்று நினைப்பதாலேயே சகல துக்கமும் உண்டாகிறது.

THE CAUSE OF MISERIES IS TO BELIEVE WE ARE THE PERISHABLE BODY.

சந்யாசம் என்கிற தியாகமும் பிராணிகளுக்குபரிகாரம் செய்வதும் உத்தமம்

THE IDEAL PENANCE IS ONE WHO RENOUNCES THE WORLD & COMPASSIONATE.